கருணாயிசம் - தற்போதைய தமிழின அரசியலின் ஒரே கொள்கை -சுப.உதயகுமார்




இந்திய, தமிழக அரசியலில் 1950களிலும் அறுபதுகளிலும் சக்தி வாய்ந்தவராயிருந்த பெருந்தலைவர் காமராசர் (1903-1975) தன்னை ஒரு சோசலிசவாதி என்று அழைத்தார். “பின்தங்கியிருப்போர் முன்னேற வேண்டும். வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உறைவிடம், கல்வி, வேலை – இவை கிடைக்க வேண்டும். இதுவே சோஷலிசம்” என்றார் அவர். அடக்குமுறையின்றி, வகுப்புச் சார்பின்றி, அடிப்படை உரிமைகளுக்கு பாதகமின்றி சோசலிச சமுதாயம் அமைக்க முடியுமென்று தான் நம்புவதாக அடித்துச் சொன்னார் காமராசர். காங்கிரசின் சோசலிசக் கொள்கைக்கு எதிராக அறுபதுகளில் இராஜாஜி (1878-1972) நடத்திய சுதந்திரா கட்சி தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றக் கொள்கைகளோடு பெருமுதலாளிகள், முன்னாள் மன்னர்களுக்கு ஆதரவான வலதுசாரி சக்தியாக இந்திய, தமிழக அரசியலில் இயங்கி, பெருமளவு மக்கள் ஆதரவு இன்றி நொண்டிக் கொண்டிருந்தது.

திராவிடர் கழகத்தின் தலைவர் தந்தை பெரியார்-மணியம்மை திருமணத்திற்குப் பிறகு, திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டம் செப்டம்பர் 17, 1949 அன்று சென்னையில் நடந்தது. அதில் பலரும் பேசிய பிறகு, அறிஞர் அண்ணா ஓர் அறிக்கை வாசித்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டார்: “திராவிடர் கழகத்திலே இருந்து நாம் பணியாற்றுவதின் நோக்கம், நாட்டிலே அறிவுப் புரட்சி உண்டாக்கி, வைதீக ஆதிக்கத்தை அகற்றி – நல்லாட்சி அமையவும், வட நாட்டு ஏகாதிபத்தியம் குழம்பி, திராவிடத்தைத் தேய வைக்காமல் தடுக்கவுமேயாகும். மற்ற சில அரசியல் கட்சிகள் போல உடனடியான அரசியல் நோக்கம் கொண்டதல்ல நமது பணி. திராவிடச் சமுதாய ஜாதித் தளைகளை நீக்கி மதப் பிடிப்புகளை அகற்றி, பொருளாதாரத் துறையில் சம தர்ம நாடாகவும், அரசியல் துறையில் எந்த அந்நிய நாட்டிற்கும் அடிமைப்படாமலும், தனி உரிமையுடன் விளங்க வேண்டுமென்பதே நமது குறிக்கோள்.”

அந்த அறிக்கை நாட்டின் நிலையை தெளிவாக விளக்கியது: “நாட்டின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். வட நாடு-தென்னாடு என்னும் பேத உணர்ச்சி, டில்லியில் பேசப்படவேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. மொழி ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாகாண ஆட்சி மன்றங்கள் தில்லியின் சூத்திரக் கயிற்றிலாடும் பதுமைகளாக்கப்பட்டு விட்டன. தொழிலாளரின் பிரச்சினை, யாரும் ஒதுக்கிவிடாத நிலையிலும் வளர்ந்துவிட்டது. பொருளாதார நிலையோ, பஞ்சமும், பட்டினியும், வேலையில்லாக் கொடுமையும் நாட்டிலே கிளம்பிக் கேடு விளைவிக்கும் விதத்தில் கெட்டு வருகிறது. பழமையோ, புதிய பட்டாபிஷேகத்துக்கான நாள் குறித்துக் கொண்டிருக்கிறது.” பக்குவப்பட்டத் தலைவர் என்பதால் அண்ணா தன் தோழர்களை அருமையாக வழிநடத்தினார். திராவிடர் கழகத்தை, அங்கிருக்கும் பணத்தைக் கைப்பற்ற நினைத்தால், மோதல் போக்கு வளரும், பேதப்பேச்சு முன்னணிக்கு வந்து, கலகச் சூழ்நிலை உருவாகி, வெறுப்பே மிச்சமாகும் என்று தனது தோழர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொன்னார். பிறர் கேலி செய்தாலும் பரவாயில்லை, “பகை, பலன் தராது – முடிவு காண முடியாதது – எதிர்ப்புச் சக்திகளுக்கு, பாசிசத்துக்கும் – பழைமைக்கும் இடமளிக்கக் கூடியதாகும். எனவேதான், ஆற்றல் இருந்தும் அடக்கம் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் – கோழை என்று கேலி செய்யப்படுவதானாலும் சரி, வெறியன் என்ற சொல்லுக்கு இலக்காகக் கூடாது என்று எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டார் அண்ணா.

செப்டம்பர் 18, 1949 அன்று காலை அமைப்புக் குழு கூட்டம் நடத்திவிட்டு, மாலை சென்னை, இராயபுரம் இராபின்சன் பார்க் மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாக் கூட்டம் நடத்தினர். இறுதியாக அண்ணா பேசும்போது, அண்மைக் கால நிகழ்வுகளை, இக்கட்டுகளை, பெரியாரின் போக்கை, புதிய கட்சி தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றித்தான் அதிகம் பேசினார். புதிய கட்சியின் கொள்கைகள் ஆங்காங்கு குறிப்பிடப்பட்டன. “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபூரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் சிழிக்கச் செய்தல் வேண்டும்” என்றார். “நாட்டிலே ஆற்றி வந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம்! பாசீசத்தையும் பழமையையும், நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று கொட்டும் மழைக்கிடையே முழங்கினார் அண்ணா. “முக்கியமாக முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். ...பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்!” என்ற வீர முழக்கத்தோடு தனதுப் பேச்சை முடித்தார் அண்ணா.

கட்சித் தொடங்கி சுமார் பதினேழு ஆண்டுகள் கழித்து தேர்தலில் பெரும்பான்மை பெற்று, 1967 பெப்ருவரி முதல் 1969 பெப்ருவரி வரை முதல்வராகப் பணியாற்றி, அறிஞர் அண்ணா (1909-1969) அகாலமாக மரணமடைந்ததும், நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் நாவலரைப் புறந்தள்ளி, எம்.ஜி.ஆர். போன்ற நெருக்கமான நண்பர்கள், முன்னணித் தலைவர்கள் உதவியுடன் கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியைப் பிடித்தார். “கருணாநிதியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு பலசாலிக்குப் பின்னால் தனது பேதங்களை விட்டொழித்து தி.மு.க. ஒன்று சேர்ந்திருக்கிறது” என்று ஸ்டேட்ஸ்மேன் நாளிதழ் தலையங்கம் எழுதியது. பத்திரிகையாளர் ப. திருமாவேலன் குறிப்பிடுவது போல, “கருணாநிதி அளவுக்கு உயரம் தாண்டியவர்கள், தமிழக அரசியலில் இதுவரை எவரும் இல்லை. ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வர், தொடர்ச்சியாக 11 முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர், 38 வயதில் தி.மு.க. பொருளாளர், 44 ஆண்டுகளாகத் தி.மு.க-வின் தலைவர் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.” நேரங்காலம் பார்க்காத உழைப்பு, ரத்த ஓட்டம் மொத்தமும் அரசியலாக ஓடிக் கொண்டிருப்பது, எதிர்ப்பையே பார்த்துப் பார்த்துப் பழகிய தன்மை, மனவலிமை, சுயசிந்தனை என கருணாநிதியின் பலங்களைப் பட்டியலிடுகிறார் திருமாவேலன்.

தேர்ந்த நிர்வாகியாக தனது பொறுப்பை துவங்கித் தொடர்ந்தவர், இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தார். சர்வாதிகாரத் தன்மை கொண்ட இந்திரா காந்தி, 1976-ம் ஆண்டு கருணாநிதி அரசை கவிழ்த்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் ஒன்றை நிறுவினார்.
லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் தமிழக இல்லங்களில், தெருவோர அளவளாவல்களில், தமிழ் குடிமைச் சமூகத்தில் வந்து புகுந்தன. சர்க்காரியா கமிஷன் தனது அறிக்கையில் கருணாநிதியும், அவரது அமைச்சர்களும் மிக நுட்பமாக, தடயங்கள் ஏதுமின்றி ஊழல் செய்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதனை “அறிவுபூர்வமான ஊழல்” (scientific corruption) என்றழைத்தது. வெற்றுப்பேச்சும், வாய்ப்பந்தலும், வாய்ச்சொல் வீரமும் மலிந்து கிடந்த தி.மு.க.வின் அரசியலில், கட்சிக் கொள்கைகள் கவர்ச்சி மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட்டன. “அண்ணா வழியில் அயராது உழைப்போம்,” “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” போன்ற கவர்ச்சி வாசகங்களின் பின்னால் எந்தவிதமான தெளிவான அரசியல் சித்தாந்தமோ, பொருளாதாரக் கோட்பாடோ, சமூக சிந்தனையோ இருக்கவில்லை. பேருந்து நிலையங்களுக்கும், சாலைகளுக்கும், கட்டிடங்களுக்கும் அண்ணா பெயரை சூட்டுவதுதான் விமரிசையாக நடந்தது.

“அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என்பது கருணாநிதி தி.மு.க.வால் முக்கிய கொள்கையாக வலியுறுத்தப்பட்டாலும், எது அண்ணா வழி, அதனுடைய சிறப்பம்சங்கள் என்ன, அந்த வழி தமிழகத்தை எங்கே இட்டுச் செல்லும் என்றெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆரின் சக்திமிக்கப் புகழையும், முக்கியத்துவத்தையும் குறைக்கவும், அவருக்கு தொழிற்போட்டியை ஏற்படுத்தவும், தனது மகன் மு. க. முத்துவை முன்னிலைப்படுத்தவும் கருணாநிதி முயன்றபோது, அவரும் எம்.ஜி.ஆரும் மோதிக்கொண்டனர். தி.மு.க.விலிருந்து 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர். “அண்ணாயிசம்” என்று பதிலளித்தார். அண்ணாயிசம் என்றால் என்ன என்று யாரும் அறிந்திருக்கவில்லை. இதை குழப்பம், வெறுமை என்ற அர்த்தங்களில் சித்தரித்து பல நகைச்சுவை உரையாடல்கள் தமிழகமெங்கும் பரவிக்கிடந்தன. எடுத்துக்காட்டாக ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் வைகைவளவன் என்ற சோ நடித்த கதாபாத்திரம் சொல்வார்: “அண்ணனுக்கெல்லாம் தம்பி, தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அதுதான் அண்ணாயிசம்” என்று.

தமிழகத்து கருணாயிசம்
இன்றைய தமிழக அரசியலில் ஒரே ஒரு கொள்கைதான் கோலோச்சுகிறது. தமிழீழத்தையும் சேர்த்து சிந்தித்தால், ஒட்டுமொத்த தமிழின அரசியலில்கூட அதே கொள்கைதான் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கொள்கை கருணாயிசம். கருணாயிசம் என்றதும் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி செய்து வருகிற சமரச அரசியலோ, தமிழீழத்தில் கருணா செய்து வருகிற துரோக அரசியலோ மட்டும் உங்கள் மனத்திரையில் எழுந்தால், கருணாயிசத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். கருணாயிசம் என்பதை சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் எனும் மும்மையைக் குறிக்கும் ஒற்றைப் பெயராகக் கொண்டால், தமிழினத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கருணாயிசத்தையே கொள்கையாகக் கொண்டிருப்பது புரியும்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால், என் வயதொத்த தமிழ் இளைஞர்கள் பலரும் கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி எதிர்த்தபோதும், என் போன்றோர் தி.மு.க. அனுதாபிகளாகவே இருந்தோம். நாளடைவில் பெருந்தலைவர் காமராசர் சொன்னதுபோல, தி.மு.க., அ.தி.மு.க. எனும் இரண்டு கட்சிகளுமே “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” எனும் உண்மை புரிய ஆரம்பித்தது. இந்தக் கட்சிகள் கடைபிடித்த கருணாயிசம் கொள்கை புரியத் துவங்கியபோது, அவற்றிடமிருந்து மெதுவாக விலக ஆரம்பித்தோம். 1999 பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து, கருணாநிதி வைதீகபூரியோடு கைகோர்த்தபோது, தனது சுயநலத்துக்காக மாறி மாறி காங்கிரசு- பா.ஜ.க. நட்பு என வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோனபோது அவர் மீதிருந்த நம்பிக்கை முழுவதுமாக விலகியது. ஈழத் தமிழர் பிரச்சினையில், குறிப்பாக 2008-2009 காலகட்டத்தில் நடந்த இனப்படுகொலையின்போது அவர் நடத்திய நாடகங்கள், துரோகங்கள், எதிர்ப்புக்களைப் பார்த்தபோது அவர் மீதிருந்த மரியாதையும் முற்றிலுமாக விலகியது. கருணாயிசம் ஆபத்தான கொள்கை மட்டுமல்ல, கடுமையாக எதிர்த்து ஒதுக்கப்பட வேண்டிய கொள்கையும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, கருணாயிசம் என்பது சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தன்னலம், தன் குடும்ப நலம், தன் இயக்கத் தோழர் நலம் மட்டுமே முதன்மைப் படுத்தப்படுவதுதான் கருணாயிசம். எவ்வளவோ ஆண்டு கால பொதுவாழ்வு, எத்தனையோ முறை மத்திய, மாநில அதிகாரம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டாலும், பெருமை பேசினாலும், பொதுமக்களுக்கு பயன்படாமல் முழுமையாக சுயநல அரசியல் நடத்துவதுதான் கருணாயிசம். பொதுமக்கள் ஒரு போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குப் போய் கண்ணியத்தோடு, மரியாதையோடு, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், யாராலும் இம்சைப் படுத்தப்படாமல் தன் வாகனத்துக்கு சாலை வரி கட்டக்கூட முடியாத நிர்வாகம்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலுள்ள ஆட்டோ வாடகையைக்கூட ஒழுங்குபடுத்தாத பொதுவாழ்வுதான் இந்தத் தலைவர்களுடையது. “இந்தியா முழுக்க இதுதானே நிலை?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அங்கெல்லாம் யாரும் எழுபத்தைந்து ஆண்டு கால பொதுவாழ்வு என்று பெருமை பேசிக் கொள்வதில்லையே?

தேர்தலில் வென்றால் இந்தியனாய் தேசபக்தியில் திளைப்பதும், தேர்தலில் தோற்றால் தமிழனாய் உருப்பெறுவதும் கருணாயிசத்தின் பிழைப்புவாதம். அதிகார வர்க்கச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றிய நினைவுகள் ஏதுமின்றி அமைதி காப்பதும், ஆதிக்க சக்திகள் இன்னல் கொடுத்தால், பார்ப்பனீயத்தை எதிர்ப்பதும் இந்தப் பிழைப்புவாதத்தின் தன்மை. மத்திய அரசோடு மோத வேண்டுமானால் மாநில சுயாட்சியை நினைவு கூறுவதும், ஈழத் தமிழர் பாசம் பொங்கி வழிவதும் இயல்பு. ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவோ, காவிரி நதிநீர் பிரச்சினைக்காகவோ, இவை போன்ற இதர முக்கிய பிரச்சினைகளுக்காகவோ தில்லிக்கு நேரில் போய் வாதாட, போராட விரும்பாத, முடியாத தலைவர், தனது குழந்தைகளுக்கு, பேரனுக்கு, தோழர்களுக்கு பதவிகள் பெறுவதற்காகப் போய் மன்றாடுவது பிழைப்புவாதத்தின் உச்சக்கட்டம். காரிய சித்திக்காக கழுதையின் காலையும் பிடிப்பதுதான் பிழைப்புவாதம்.

கொள்கைகள் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதும், அந்த கொள்கைகளுக்காக உறுதியாக நிற்காமலிருப்பதும், ஆனால் அப்படி இயங்குவதாக ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதும், உருட்டுவதும், புரட்டுவதும் கருணாயிசத்தின் முக்கியமான அம்சங்கள். நேரத்துக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக் கொள்வதுதான் சந்தர்ப்பவாதம். இந்துத்துவக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது, அவர்கள் அமைச்சரவையில் பங்கேற்று ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பது, அடுத்த தேர்தலில் மதவாதம் பற்றி வகுப்பு எடுப்பது, மதச்சார்பின்மை கொள்கைக்காகவே உயிர் வாழ்வதாக பொய் சொல்வது எல்லாம் சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம். ஈழம் அடைவதே எங்கள் தாகம் என்று இறுமாப்பு பேசுவதும், தில்லிக்கு பயந்து சென்னை ‘டெசோ’ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் “இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு” என்று மாற்றிக்கொள்வதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடவே கூடாது என்று வெளியே முழங்குவது, ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது இன்னொரு சிறந்த உதாரணம்.

சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் தவிர இன்னும் பல முக்கியமான குணாதிசயங்கள் கொண்டது கருணாயிசம்:
· தொலைதூர சிந்தனையோ, செயல்பாடோ இன்றி அண்மைக்கால வெற்றிகளை, பலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு அரசியல் நடத்துவது;
· தீங்கற்ற தமிழ்ச் சமுதாயம் அமைப்பதற்காய் முயல்வதைவிட, வெறும் தீயணைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவது;
· மக்கள் பிரச்சினைகளில் தீர்க்கமான நிலைப்பாடு எடுக்காமல், நிரந்தரத் தீர்வுக்கு முயலாமல், கடிதம் எழுதுவது, அறிக்கை விடுவது, நீட்டி முழக்குவது என வறட்டு அரசியல் மட்டுமே செய்வது;
· முக்கியமான பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தை முக்கியமற்ற விடயங்களுக்கு திசை திருப்புவது;
· தனது திறமைகளை, சாதனைகளை “பனைத் துணையாய்” கொண்டாடுவது, எதிர்கட்சித் தலைவர்களின் திறமைகளை, சாதனைகளை “தினைத் துணையாய்க்” கொள்வது;
· மானம், ரோசம், வெட்கம் என எதுவுமே இல்லாமல் வெறும் வார்த்தைகளாலேயே உருட்டுவது; இதுதான் அரசியல் சாணக்கியத்தனம் என்று நியாயப்படுத்துவது;
· மக்கள் மீதும், மற்றக் கட்சிகள் மீதும் திடீர் பாசம், திடீர் மறதி எழுந்து மறைவது;
· மலர்க்கிரீடம், வீரவாள், தேர்பவனி, பாராட்டு விழா, சினிமாக்காரர் நிகழ்வுகள் என புகழ் போதையில் திளைப்பது;
· கட்டிடங்கள் கட்டுவது, நினைவுச் சின்னங்கள் எழுப்புவது, தன் பெயரைப் பொறிப்பது என ஒரு வரலாற்றுச் சிந்தையோடும், காலாதீத உணர்வோடும் மட்டுமே இயங்குவது.
இந்த கருணாயிசத்தின் அம்சங்களைப் பற்றி எழுதினால், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இங்கே ஒரு குறிப்பிட்டத் தலைவரை மட்டுமோ, அல்லது அவரது கட்சியை மட்டுமோ பழிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டது போல, பெரும்பாலான தலைவர்கள், கட்சிகள் கருணாயிசத்தைத்தான் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். கருணாயிசம்தான் இன்றையத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் கொள்கையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது தேவைக்கேற்றபடி, திறமைக்கேற்றபடி அதை மாற்றியமைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. “காமராஜ் ஆட்சியை அமைப்போம்” என்கிற காங்கிரசுக்காரர்களும், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும், அரசியலில் புதிதாக அடியெடுத்துவைக்கும் பல புதுமுகங்களும் கருணாயிசத்தைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்த கொள்கை அத்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலம் தனிப்பெரும் சக்தியாக வலம் வரும் கலைஞர் கருணாநிதிதான்.

தமிழீழ கருணாயிசம்

தமிழகத்து கருணாயிசம் இப்படி வேலை செய்தால், தமிழீழ கருணாயிசம் துரோகத்தின் உச்சத்துக்கே செல்கிறது. இந்த துரோக கருணாயிசம் மனித வரலாற்றில் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. இயேசு நாதரை கைது செய்யத் திட்டமிட்ட ரோமாபுரியின் உயர்பூசாரிகள் அவர் யாரென்று தெரியாமால் திணறிய நிலையில் 30 வெள்ளிக் காசுகளை கூலியாகப் பெற்றுக்கொண்டு இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் யூதாஸ். பண ஆசையினால்தான் யூதாஸ் அந்த துரோகத்தைச் செய்ததாகவும், தான் எதிர்பார்த்தபடி ரோமப் பேரரசின் ஆட்சியை இயேசு நாதர் கவிழ்க்காததால் யூதாஸ் கோபம் கொண்டிருந்ததால்தான் காட்டிக்கொடுத்தார் என்றும், கடவுளின் திட்டத்தை நிறைவேற்ற இயேசுதான் தன்னைக் கண்டுணர உதவும்படி கேட்டுக்கொண்டார் என்றும் பல புரிதல்கள், விவாதங்கள் நடக்கின்றன. ஆனாலும் யூதாஸ் காட்டிக் கொடுத்தவர் என்பதை ஒட்டுமொத்த உலகமே ஒத்துக்கொள்கிறது.

தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் யூதாஸ் போன்ற பழிச்சொல் பெற்றவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த வெங்கடேஸ்வர எட்டப்பன். 1780ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் குடும்பத்தார் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் நல்லுறவு பூண்டு, சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர்; அவ்வப்போது அவர்களுக்கு உளவுத் தகவல்களையும், படையாட்களையும் கொடுத்து வந்தனர். ஆனால் உண்மையில் எட்டப்பன் காட்டிக் கொடுக்கிறவர் அல்ல என்றும், அதிகாரத்தில் இருந்தபோது ஏராளமான மக்கள் நலப் பணிகளை செய்தார், குளங்களை வெட்டி தண்ணீர் வசதி செய்தார், பல கவிஞர்களை, புலவர்களை பாதுகாத்தார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். மா.பொ.சி. எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான் எட்டப்பனை மோசமானவராக சித்தரித்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் புதுக்கோட்டை விஜயரகுநாதத் தொண்டைமான்தான் என்கின்றனர் அவர்கள்.

துரோகம் என்பதற்கு தமிழ் கலாச்சாரத்தில் பல சொல்லாடல்கள் உள்ளன; நம்பிக்கை துரோகம், முதுகில் குத்துவது, (வளர்த்த கடா) மார்பில் பாய்வது, உறவாடிக் கெடுப்பது, காட்டிக் கொடுப்பது என்பன. ஒருவருடன் நெருங்கிப் பழகி, நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அந்த உறவுக்கு உண்மையாக இல்லாமல், எதிராக நடப்பதுதான் துரோகம். இந்த துரோகம் எந்த உறவிலும் நடக்கலாம். என்னை/எம்மை இதனால் இவர் காப்பார் என்று கருதிக் கொண்டிருக்கும்போது, அந்த எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக நடந்து கேடு விளைவிப்பதுதான் துரோகம். நட்பு, திருமணம், பொதுவாழ்வு போன்ற உறவுகளில் தனிமையை மதிப்பது, “உடுக்கை இழந்தவன் கை” போல உதவுவது, பொது வெளியில் ஒருவரையொருவர் குறை சொல்லாமல் இருப்பது, இரகசியம் காப்பது, பிறரிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது போன்றவை முக்கியமான கூறுகள். இவற்றில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ முறிப்பது துரோகமாகக் கொள்ளப்படுகிறது.

யூதாஸ், எட்டப்பன் எனும் அசிங்கமான வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் கருணா என்ற முரளிதரன். கிழக்கு மாகாணம் பட்டிகொல மாவட்டம் கிரண் எனும் கிராமத்தில் பிறந்தவர் இந்த கருணா. 1983-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து, பல போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து, 1990-ஆம் ஆண்டு 900 சிங்கள, முஸ்லீம் காவல்துறை அதிகாரிகளைக் கொன்று, கிழக்கு மாகாணத்தின் தலைமைத் தளபதியாக உயர்ந்தார். தலைவர் பிரபாகரனுக்கு மெய்க்காப்பாளராக இருந்து, புலிகளின் இராணுவப் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் கருணா. விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டி 2004 மார்ச் மாதம் இயக்கத்திலிருந்து வெளியேறினார். தீவிரவாதத்தைக் கைவிடுவதாகவும், சனநாயக மைய நீரோட்டத்தில் கலப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் பணம் கையாடல் செய்ததாகவும், ஒழுக்கமின்றி நடந்ததாகவும் விடுதலைப் புலிகளின் உளவுத்துறை கண்டுபிடித்து அவரை நெருங்கிக்கொண்டிருந்ததுதான் காரணம் என்று இயக்கம் தெரிவித்தது. கருணா தரப்புக்கும் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து, முன்னவர் பிடித்து வைத்திருந்த இடங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக புலிகள் அறிவித்தனர். எனினும் சில நூறுபேர் கொண்ட படையோடு இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தினார் கருணா. 2006-ஆம் ஆண்டு கருணா படையின் உதவியோடு இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளை வெளியேற்ற இலங்கை இராணுவம் ஒரு தாக்குதலைத் தொடங்கி, 2007 யூலை மாதம் அதில் வெற்றியும் பெற்றது.

இலங்கை அரசின் உதவியுடன் திருட்டுத்தனமாக வெளிநாட்டு தூதர்களால் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டு பெற்று, கருணா லண்டனுக்குச் சென்றபோது 2007 நவம்பர் 2-ஆம் நாளன்று பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபய ராஜபக்சே அந்த கடவுச்சீட்டைத் தந்ததாக கருணா நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். 2008 சனவரி 25 அன்று ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கருணா, யூலை 3 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை வைத்தும், பிரிட்டிஷ் அரசு அதை ஏற்கவில்லை. இலங்கைக்குத் திரும்பியதும் அரசியலில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆன கருணா, ராஜபக்சே அமைச்சரவையில் மீள்குடியேற்றத் துறை துணை அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஈழத் தமிழர் இயக்கங்களின் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை கோரும் கருணா, அதன் மூலம் தனது தலையை தற்காத்துக்கொள்ள முயன்று வருகிறார்.

கருணாயிசத்தை இனம் காண்போம்

நேர்கோடு ஒன்று வரைந்து முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகளை அவற்றின் கொள்கைகள் அடிப்படையில் அந்த நேர்கோட்டில் அடையாளப்படுத்துங்கள். முற்போக்குச் சிந்தனை, சமத்துவம், சனநாயகம், சமூக நீதி, பெண் விடுதலை, சாதி-மத மறுப்பு, கருத்துச் சுதந்திரம், மனித உரிமை போன்ற கொள்கைகள் கொண்ட இயக்கங்களை இடது கோடியில் நிறுவலாம். சோசலிசம், கம்யூனிசம் பேசும், உண்மையாகவேப் பேணும் இந்தக் கட்சிகளை இடது சாரிகள் (Leftists) எனக் குறிப்பிடுகிறோம்.

“சமூகம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது; எந்த மாற்றத்துக்கும் இங்கே இப்போது தேவையே இல்லையே” என்று வாதிட்டு தற்போதைய சமூக நிலையை, அவலங்களை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நினைக்கும், பாடுபடும் இயக்கங்களை வலது கோடியில் குறிக்கலாம். பழமைவாதிகள், மதவாதிகள், சாதி வெறியர்கள், வெறுப்பு-கோபம் போன்ற கொடும் உணர்வுகளின் அடிப்படையில் வன்முறை அரசியல் நடத்துபவர்கள், ஃபாசிஸ்டுகள் போன்றவர்களை வலது சாரிகள் (Rightists) என்றழைக்கிறோம்.

அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் மதிற்மேல் பூனையாக இயங்கும் இயக்கங்களை நேர்கோட்டின் மத்தியில் அடையாளப்படுத்தலாம். அவர்களை மையவாதிகள் (Centrists) என்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் முற்போக்கு கொள்கைகளைப் பேசிக்கொண்டு, பிற்போக்கு செயல்களில் ஈடுபடும் குழப்பவாதிகள், சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள்.

இந்த அரசியல் நேர்கோட்டை உற்றுநோக்கினால், இடது பாதியில் வெகு குறைவான சக்திகள், தலைவர்கள் இடம்பெறுவதையும், வலது பாதியில் (அதாவது மையப் புள்ளியிலிருந்து வலதுகோடி வரை) பெரும் கூட்டமேக் குழுமிக்கிடப்பதையும் காணலாம். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோர் கருணாயிசத்தைத்தான் கொள்கையாகக் கொள்கின்றனர். ஆகஸ்ட் 17, 2013 அன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 155-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா சொன்னார்: “ஒரு வருடத்துக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், நெல் பயிரிடுங்கள்; பத்து வருடங்களுக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், மரங்களை நடுங்கள்; நூறு வருடங்களுக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், மக்களைக் கற்பியுங்கள் என்பது ஒரு சீனப் பழமொழி. எனது அரசு இவை மூன்றையுமே செய்திருக்கிறது. இப்போதும், இனிவரும் ஆண்டுகளிலும், எதிர்காலத்திலும் நல்லதோர் அரசை தருவதற்கும், தலைமுறைகள் பேசும் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கும் நான் உறுதி பூண்டிருக்கிறேன்.” அப்படியே நடந்து கொண்டு உண்மையிலேயே ஒரு சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார மாற்றத்தை சாதித்துக் காட்டினால், அவர் கட்சிக்காரர்கள் அதனை “அம்மாயிசம்” என்ற கொள்கையாகவே எதிர்காலத்தில் முன்வைக்கலாம். நேர் எதிராக அடக்குமுறைகள், அவதூறு வழக்குகள், என்கவுண்டர்கள், ‘தலைவா’ வகை விவகாரங்கள் எனத் தொடர்ந்தால், இது அம்மா வகை ஃபாசிசம் எனக்கொண்டு அவரது எதிரிகள் “அம்மாசிசம்” என்றும் அழைக்க நேரலாம்.

ஆனால் இப்போதைக்கு தமிழினத்தின் மீது கருணாயிசம்தான் கோலோச்சுக்கிறது. இவர்களின் கருணாயிசம் நம்மை கரைசேர்க்கும் என்று நம்புவது மணல் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான். தமிழினம் மிக மோசமான நிலையில் இருப்பதால், புது அரசியல் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்; புதுவகை அரசியல் ஊட்டச்சத்து புகட்டப்பட வேண்டும்; புத்தம்புது அரசியல் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; புதியதோர் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதாரப் புரிதல், அரசியல் தத்துவங்களை-விழுமியங்களை அறிதல், அரசுக் கொள்கைகளை விவாதித்தல் என ஓர் உயர்நிலை அரசியல் நடத்தப்பட வேண்டும். சினிமாத் திரையில் தலைவனைத் தேடி, அரசியலில் ஹீரோவைத் தேடி சீரழியாது, நடிகர்-தலைவர்களையும், தலைவர்-நடிகர்களையும் வீட்டுக்கு அனுப்பி ஒரு புதிய கலாச்சார மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

காமராசரைப் பற்றி புகழ்ந்த கவிஞர் கண்ணதாசன் இப்படிப் பாடினார்:
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அன்னைக் கோவிலுக் கவனோர் கோபுரம்
...
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அடுத்த கட்டத்தை அழகுற நடத்த.

ஆனால் இன்றைய நிலையில், தமிழகமானாலும் சரி, தமிழீழமானாலும் சரி, ஒரே ஒரு தலைவன் வருவான், ஒரே ஒரு கொள்கை தருவான், நம்மையெல்லாம் சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்ப்பது பெரும் மடமை. தமிழினத்தின் இன்றைய அரசியல் இயலாமைக்குத் தீர்வு “அந்த மனிதனைப்” போன்ற ஆயிரமாயிரம் மனிதரை அடையாளம் காண்பதும், ஆங்காங்கேக்கூடி அளவளாவி ஓர் ஆன்ம சுயபரிசோதனையில் ஈடுபடுவதும், அனைவருமாக சாதி-மதம் கடந்து ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு நம் இலக்கு நோக்கி நடப்பதும்தான்.

உதவிய நூல்கள், கட்டுரைகள்:
[1] டி. எம். பார்த்தசாரதி, தி. மு. க. வரலாறு. சென்னை: பாரதி நிலையம், 1986. பக்கங்கள்: 85-86, 88-89, 92, 109-110, 112, 115.
[2] ப. திருமாவேலன், “கருணாநிதி 90: வரலாறும், தகராறும்!” ஆனந்த விகடன், 5.6.2013.
[3] பல இணைய தளங்கள்.
 
- சுப. உதயகுமார், இடிந்தகரை

தேனின் பயன்கள்

தேன்தேனின் பயன்கள் !!!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கண் பார்வைக்கு
 
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
இருமலுக்கு
 
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா
 
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு
 
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
 
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
இதயத்திற்கு டானிக்
 
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

FAKE ID - பேஸ்புக் , TWITTER

FAKE ID - பேஸ்புக் , TWITTER

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள். இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.

யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த
தேதியினையும், அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு
பாருங்கள்.குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள்.

உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும்.

ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும்,ஏனோதானோ என
நிரப்பப்பட்டும் இருக்கும்.

போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments,
Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.ஆண்களுக்கு!…
பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக
ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.

போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல்
குறிப்பிடப்பட்டிருக்கும்.

TOP 10 ஆண்களுக்கு மலட்டுத்தன்மை -பழக்கவழக்கங்கள்

TOP 10  ஆண்களுக்கு மலட்டுத்தன்மை -பழக்கவழக்கங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் பெண்களை விட ஆண்களுக்கு நிறைய கெட்ட பழக்கவழக்கங்கள் இருப்பதால், அந்த பழக்கவழக்கங்களால் மலட்டுத்தன்மையானது ஏற்படுகிறது. எனவே அத்தகைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால், நிச்சயம் மலட்டுத்தன்மையில் இருந்து விடுபடலாம். இப்போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்னவென்று ஒருசிலவற்றைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மாற்றி வந்தால், மலட்டுத்தன்மை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

 

1. புகைப்பிடித்தல்


பெரும்பாலான ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம். ஏனெனில் சிகரெட்டில் நிக்கோட்டின் மற்றும் புகையிலை இருப்பதால், அது விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, அதன் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

 

2. உடல் எடை


உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்திவிடும். எப்படியெனில், உடல் எடை அதிகமானால், ஹார்மோன்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

 

3. மன அழுத்தம்


தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் வேலைப்பளுவினால் ஆண்கள் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தம் அதிகமானால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஏனென்றால், மன அழுத்தத்தினால் விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடுகிறது.

4. லேப்டாப்


தற்போது லேப்டாப் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அவ்வாறு ஆண்கள் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, மடியில் வைத்துக் கொண்டு வேலை செய்வதால், அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

5. ஸ்டெராய்டுகள்


நடிகர்கள் போன்று உடல் வடிவமைப்பை கொண்டு வருவதற்கு பெரும்பாலான ஆண்கள் ஸ்டெய்டுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு ஸ்டெய்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

 

6. சுடுநீர் குளியல்


உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு, ஆண்கள் சுடுநீர் குளியலை மேற்கொள்வார்கள். ஆனால் அவ்வாறு சூடான நீரில் குளியலை மேற்கொண்டால், அது விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, நாளடைவில் மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

 

7. மொபைல் போன்


மொபைல் இல்லாதோரை இவ்வுலகில் காண இயலாது. அந்த வகையில் ஆண்கள் அந்த மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்வதால், அதிலிருந்து வெளிவரும் அதிர்வுகள் மற்றும் கதிர்களால், விதைப்பையில் அதிர்ச்சி ஏற்பட்டு, மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

8. ஆல்கஹால்


ஆல்கஹாலை அதிகம் குடித்தால், டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியானது குறைந்து, விந்தணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இந்த நிலை நீடித்தால், நாளடைவில் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும்.

9. இறுக்கமான உள்ளாடை


எப்போதும் இறுக்கமான உள்ளாடையை அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுவின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

 

 

10. போதைப் பொருட்கள்



மரிஜுவானா என்னும் போதைப்பொருள் இளைஞர்களை எளிதில் அடிமையாக்கிவிடும். இதனை ஒருமுறை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து வெளிவருவது கடினம். மேலும் இந்த மரிஜுவானா விந்தணுவின் உற்பத்தியை குறைத்துவிடும்

 

பழங்களின் பயன்கள்

 பழங்களின்  பயன்கள்




இயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறியுமுன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே மிக விரும்பியிருப்பான் என்பது உறுதி. வெறும் சுவைக்காக மட்டுமா பழங்கள்? இல்லை, பழங்கள் ஒரு முழு உணவாகக் கூடியவை, ஒவ்வொரு பழமும் –


அது சின்னச் சின்ன திராட்சையோ, மிகப்பெரிய பலாவோ, எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது
நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பழங்கள் மிக வேகமாக சீரணமாகக் கூடியவை. இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது. இல்லையெனில், மற்ற உணவுகளை உண்ணத் தொடங்குமுன் பழங்களைச் சாப்பிட வேண்டும். வேறு எதையாவது சாப்பிட்டபின் பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது.

எந்தெந்தப் பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? அவற்றைச் சாப்பிடுவதன் பயனென்ன?

மாம்பழம்: ‘மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்’ என்பது பழமொழி. கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனியில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்தில் மிக நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது.

பலா: தமிழகத்தில் முக்கனிகள் என்று சிறப்பித்துக் கூறப்படும் மூன்று கனிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பலா. அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலியை உண்டாக்கும் என்று கருதப்படும் பலாப்பழத்தில் விட்டமின் ஏ,சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. பலாக்கொட்டையின் விட்டமின் பி1 மற்றும் பி2 அடங்கியுள்ளன. நன்கு பழுத்த பலாச்சுளைகளை மட்டுமே உண்ணவேண்டும், பழுக்காத பலாப்பழம் மற்றும் சமைக்காத பலாக்கொட்டையைச் சாப்பிடுவது செரிமானத்தைப்பாதிக்கக்கூடியது.

வாழை: முக்கனிகளில் மூன்றாவதாகக்குறிப்பிடப்படும் வாழை ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது’ என்ற பழமொழியைப் போல, விலை மலிவானதாக, ஏழைமக்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதாக இருப்பினும் பயன்களில், அடங்கியுள்ள சத்துக்களில் மற்ற பல பழங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை. மூலநோயினையும் மலச்சிக்கலையும் எளிதில் தீர்க்கக் கூடியதான இப்பழம், அனைத்து விட்டமின்கள், தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக ஏராளமான பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. கண்பார்வைக்கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது என்று இப்பழம் கருதப்படுகிறது. வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் உடல் பருமனை அதிகப்படுத்தும் என்பதால், எடைக்குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது.

பப்பாளி : பப்பாளியில், பழச்சர்க்கரைகளான குளுகோசும், ஃபிரக்டோசும் சம அளவில் காணப்படுகின்றன. நன்கு கனிந்த பப்பாளியில் ஏராளமான விட்டமின் சி, விட்டமின் ஏ, குறைந்த அளவில் விட்டமின் பி1, பி2 மற்றும் செரிமானத்துக்கு உதவும் பப்பாயின் என்ற நொதியப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், செரிமானமின்மை இவற்றுக்குக்கு அருமருந்தாகத் திகழும் பப்பாளி, கல்லீரல், கணைய மற்று சிறுநீரக நோய்களைக்கட்டுப்படுத்துவதுடன், பெண்களுக்கு மாதவிலக்கின் பொழுது ஏற்படும் சிக்கல்களைப் போக்கவும் உதவுகிறது. பழுக்காத பப்பாளியைச் சாப்பிட்டால், குடல்புழுக்கள் வெளியேறும். இதில் உள்ள கார்பின், பைப்ரின் போன்றவை இதயத்திற்கும், இரத்தம் உறைதலுக்கும் துணைபுரிகிறது.

மாதுளை: இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் துணை புரிகிறது. உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது. இதய நோய்களைக்கட்டுப்படுத்துவதிலும், கொழுப்புச்சத்தினைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றும் மாதுளை, பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தது.

ஆப்பிள் : ‘An apple a day, keeps the Doctor away’ என்னும் ஆங்கிலப்பழமொழி, ஆப்பிளின் பெருமையை விளக்கும். இதில் விட்டமின் சி குறைவுதான் எனினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிளில் அடங்கியுள்ள சில வேதிப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கக்கூடியவை. இது புற்றுநோயினைக்கட்டுப்படுத்தக்கூடியது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கலோரி குறைவு (Negative Calorie) என்பதால் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகை வேதிமங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதால், அல்சைமர், பார்கின்சன் நோய்களில் இருந்தும் ஆப்பிள் சாப்பிடுவது மூலம் விடுபடலாம்.

திராட்சை: கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் திராட்சையில் பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் நீராலும், மாவுப்பொருட்கள் மற்றும் சியல் தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாவும் உள்ளது. திராட்சையில் ஃபிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைடிரேட் மற்றும் மாலிக் அமிலம், சிட்ரிிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் முதலியனவும் அடங்கியுள்ளன. இது இரும்புச்சத்து அதிகம் உள்ளமையால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் மாதாந்திரத்தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலம் தருகிறது. அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை மட்டுமே உண்பது நல்லது, திராட்சை எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியைத் தருவதுடன், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவுகிறது.

 

மீன் வறுவல்

மீன் வறுவல் 
 
மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 

ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து நன்கு பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
 
 
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 3 அல்லது 4 துண்டு மீனை போட்டு 3 நிமிடம் கழித்து திருப்பி போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
 
 
தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். இதைப் போல் எல்லா மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் தயார்.

மாட்டுக்கறி பிரியாணி செய்வது எப்படி?

மாட்டுக்கறி  பிரியாணி செய்வது எப்படி
 மாட்டுக்கறி பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்


மாட்டுக்கறி - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
பொதினா கொத்தமல்லி - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
கரம் மசாலா - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாரு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்


 
இவை அனைத்தையும் நன்றாக பிசைத்து 1 மணிநேரம் உரவைக்கவேண்டும்.



பாசுமதி அரிசி - 1/2 கிலோ
பட்டை, லவங்கம், பிரியாணி இலை - சிறிது
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கப்



1. எண்ணெய் மற்றும் நெய்யை உற்றி அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை கடாயில் போட்டு வதக்கி அதில் இரண்டு கப் தண்ணீர் உற்றி அரிசியை போடவும். பாதி வெந்தவுடன் இரக்கவும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி அதில் வெங்காயம், தக்காளி, பொதினா, கொத்தமல்லி ஆகியவற்றை போடு வதக்கி மசாலாவில் பிசைத்து வைத்திருத்த மாட்டுக்கறி போட்டு பிரட்டி எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும்.

3. பின்பு வேகவைதிருந்த அரிசியையும் மாட்டுக்கறியும் சேர்த்து ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் தம் வைக்க வேண்டும்.
சுவையான மாட்டுக்கறி பிரியாணி ரெடி.
 
குறிப்பு  :திருவல்லிக்கேணியில்  கிடக்கும்  பிரியாணி மிகவும் சுவை  மற்றும் விளையும் குறைவு  . இணையத்தில்  மாட்டுக்கறி  பிரியாணி  பற்றி எந்த குறிப்பும் இல்லாததால்  இந்த பயனுள்ள பதிவு  

இறால் குழம்பு


விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வித்தியாசமான வகையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாளே வேஸ்ட் என்பது போல் இருக்கும். ஆகவே அப்போது வீட்டில் ஏதேனும் தமிழ்நாட்டு செட்டிநாடு ரெசிபியில் ஒன்றான செட்டிநாடு இறாலை செய்து சாப்பிடலாம். இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (அரைத்தது)
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
 

தலைவா படம்பற்றி தமிழக அரசு

 
 
இந்தப் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும் 

யு சான்றிதழ் பெற்றிருந்தாலும் , படத்தில் ஆங்கிலம் 

உள்ளிட்ட பிறமொழி வார்த்தைகள் அதிகமாக 

இடம்பெற்று இருக்கின்றன. 
 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதைப் பாதிக்கும்  

வகையில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக 

இடம்பெற்று இருக்கின்றன. 
சட்டத்தைக் கையில் எடுக்கும் நாயகன் சமுதாயத்தை 
திசை திருப்பும் வகையில் பாத்திரமேற்று இருக்கிறார்.

 
இது சமூகத்தைப் பாதிக்கும் என்பதாலும் இந்தப் படம் 

வரி விலக்குக்கு தகுதியற்ற படம் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
 
நன்றி :  தினமணி  
 
 
 
 

திருப்பதி, காளஅத்தியை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்



திருப்பதி, காளஹஸ்தியை
தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம்


 

ஆந்திரத்தின் 8 வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்

 

ஆந்திரத்தின் 8 வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்


இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
1956 - ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது, தமிழர்களுக்குச் செய்யப்பட்ட துரோகம் ஆகும்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைச் சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருகாளஹஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர் உள்ளிட்ட 8 வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
குறிப்பு : இராம தாசின்  சாதி அரசியலில்  நமக்கு உடன் பாடில்லை . அவர் கூறிய கருத்து   சரியாய் உள்ளதால் பகிரப் பட்டுள்ளது 

சிவ வழிபாடு



    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண் தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும்
சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான். வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில் தெரிகின்றது.

மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும் எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப் பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில்
ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’ என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

இவ்வாறு உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும்
இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும். இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்
- (பரி.5, 25-27)

அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.

தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற் றண்ணல் - (பரி. 9, 6-7)

ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த செய்தியை,

ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
- (கலி - 81)

ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்
- (புற - 198)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள் என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும்
குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன.

சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக் கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள் எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக் கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.


சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின் வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன. வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.

அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டு
நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின்
34ஆம் பாட்டில்,

கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே (பா- 34)

என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப் பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும் சிவபெருமானின் மூத்த பிள்ளையாகிய யானைமுகப்
பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம் பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண் தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப் பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை அதற்குச் சான்றாகக் காட்டலாம்.

இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப்
பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச்
சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு

பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின்
தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின்
வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின் செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும். மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள் குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன் குன்றுதோறும் ஆடுகின்றவன் என்பதை நக்கீரர்
திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.

திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின் திருத்தலங்களில் செய்கின்ற வழிபாட்டு முறைகள் சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய
வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப் பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம் சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது. மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள் பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில் கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள் இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.

சிறுபாணாற்றுப்படையில், “ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99)
என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும்
பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப் பெற்ற செய்தி, கழுநீர் கொண்ட எழுநாள் அந்த ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428) என்றும் குறிக்கப்பெறுகின்றன. அதுபோலப் பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில் அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,

கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப (36-37)

என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும் வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.

தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு

‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ்
இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும் சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம். அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில் தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அந்நிலங்களுக்குரிய தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள் என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக் (ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று தொடங்குகின்ற தொல்காப்பியச் சூத்திரம் இதற்க எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில் குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில் கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு சிறப்பிடம் பெற்றது என்பதைக் “கொடிநிலை, கந்தழி, வள்ளி
என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே“ என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய நிலையாமை பற்றி புறத்திணையில் காஞ்சித்திணை
வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும், சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின் சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது எனலாம்.

திருக்குறளில் சிவ வழிபாடு

சங்க இலக்கியக் காலம் சார்ந்த திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட கடவுள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை என்றாலும் சமய நெறிமுறைகளும், தத்துவ உண்மைகளும் இடம்
பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற தொடர் கடவுள் உண்மையைப்
புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும் தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். “இருள்சேர் இருவினை” (குறள் எண்.5) என்ற தொடர் வினைக் கொள்கையின் சிறப்பை எடுத்துக் காட்டும். "பிறவிப் பெருங்கடல்" (10) என்பது மறுபிறப்பு உண்மையை வெளிப்படுத்தும் "எண்குணத்தான்" என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை
உடையவன் என்பதை உணர்த்தும். திருக்குறளில் “உலகு இயற்றியான்” (1062) என்ற தொடர உலகத்தைப் படைத்த முதல்வனாம் கடவுள் உண்டு என்பதை
வலியுறுத்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' என்ற சொல் திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை
நிலைநாட்டும். அதுபோலப் “பற்றுக பற்றற்றான் பற்றினை” (350) என்ற தொடர் சிவ தத்துவ உணர்வை வெளிக்காட்டும். “மெய்யுணர்வு” (354) என்ற சொல் இறையுணர்ச்சி உடைய
பெரியோரை நினைவுபடுத்தும்.

“சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்” (359) என்ற தொடர் சிவ தத்துவக் கொள்கையைத் தெளிவுற உணர்த்தும். ஆகூழ், போகூழ் என்ற தொடர்கள் (371) விதிக் கொள்கையை
வலியுறுத்தும். “வகுத்தான் வகுத்த வகை” (377) என்ற தொடர் இறைக் கொள்கையை வலியுறுத்தும். ஊழ் என்னும் அதிகாரம் சிவ தத்துவக் கொள்கையை வலியுறுத்தும் அதிகாரமாகும்.

இந்திரன் வழிபாடு


இந்திரன் ஒரு வானியல் உருவகமாகும். ஞாயிறு பெயரும் பாதையே ஞாயிற்றுமண்டிலம். வான்கோளின் நடுவரையிலிருந்து எப்சிலான் (e) என்ற கோணத்திலிருக்கும் நீள்வட்டப் பாதையே அஞ் ஞாயிற்றுமண்டிலம். இந்த ஞாயிற்றுமண்டிலத்தின் உச்ச நிலையே இந்திரனின் குடியிருப்பு என்று தொல்தமிழ் வானியலார் கற்பித்தனர். வடக்குநோக்கிப் பெயர்கிற ஞாயிற்றின் வடசெலவு (உத்தராயனம்) முடிந்து அதன் தெற்குநோக்கிய பெயர்ச்சியாகிய தென்செலவு (தட்சிணாயனம்) தொடங்கும் புள்ளிநிலையை இக் கால வானியல் வேனில்முடங்கல் (Summer Sols-tice) என்று குறிப்பிடுகின்றது.


ஞாயிற்றின் பெயர்ச்சியிலான உச்சநிலை என்பதால், அப் புள்ளிநிலையைக் குறிக்கும் இந்திரனை வானுறையும் தேவர்களுக் கெலாம் தலைவனாக்கினர். இதையொட்டித் தொல்தமிழ் வானியலார் ஆக்கிய வானியல் புனைகதைகளே இந்திரனைப் பற்றிய தொன்மக்கதைகளாக வழிவழியாக வந்தன.


வடகோளரையில் வேனில்முடங்கலுக்குள் ஞாயிறு புகுவது சூன் 20/21ஆம் நாளாகும். இது முதுவேனில் பருவத்தில் நிகழும். இடியுடனும் மின்னலுடனும் பெய்யும் கோடைமழை இக் காலத்தது. இதனால்தான், இடியும் மழையும் இந்திரனோடு தொடர்புடையனவாயின. இதனையொட்டியும் தொன்மங்கள் புனையப்பட்டன.


செத்தோரையெல்லாம் விண்ணில் திகழும் உடுக்களாக்கி மடிந்தும் மடியாமல் அவர்கள் அங்கு வாழ்கின்றனரென்ற தமிழரின் தொல்முன்னோர்களின் கற்பனையே ஒரு நம்பிக்கையானது. இதனால்தான், செத்தபின் வானுலகம் புகுவதென்னும் நம்பிக்கை புரையோடியுள்ளது.

செத்தோரெல்லாம் உடுக்களாகிவிடுவரென்றால், அவ் வுடுக்களே தேவர்களாயிருத்தல் வேண்டுமன்றோ? எண்ணரியனவான உடுக்கள் எல்லாவற்றையுமா தேவர்களாக்க முடியும்? முடியாதே! அதனால்தான், நினைவில் வைத்துப் போற்றத்தக்க ஒரு சிலர் மட்டுமே தெய்வங்களாக்கப்பட்டனர்.

ஞாயிற்றுமண்டிலத்தின்மீது 27 உடுத்தொகுதிகள் (Constellations) உண்டு. ஆரல் (கார்த்திகை) தொடங்கி அடுப்புக்கொண்டை (பரணி) வரை என்றமையும் அந்த இருபத்தேழு உடுத்தொகுதிகள் அனைத்தையுமா தேவர்களாக்கினர்? இல்லையே!


இந்திரனின் தலைமையில் வானுறையும் தேவர்கள் 33 பேர் என்பதுதான் கணக்கு. இந்திரன் ஞாயிற்றுமண்டிலத்தின் மீதான ஒரு ஞாயிற்றுநிலை மட்டுமேயென்றபோதும், அவன் தலைமையிலான தேவர்கள் எல்லாருமே வானில் உலவும் உடுக்களாகவோ ஞாயிற்றுநிலைகளாகவோ இல்லை. பின்னர், யார்தான் அம் முப்பத்து மூன்று தேவர்கள்?


எழுத்துகளே தேவர்களாயின!


உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு, ஆய்தவெழுத்து ஒன்று, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இரண்டு என்று தமிழிலுள்ள முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாகக் கற்பிக்கப்பட்டனவென்பதை இன்றைய ஆய்வுகள் தெள்ளத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.


இந்திரனுக்கும் தமிழின் எழுத்திலக்கணத்திற்கும் இடையில் கண்ணும் இமையும் போன்ற உறவுள்ளமை இதனால் புலப்படும். இதை வைத்தே, ஐந்திரம் என்னும் தமிழ் இலக்கணநூலை யாத்தவன் இந்திரனே என்று சொல்லப்பட்டது. ஐந்திரம் என்ற அந்த இலக்கணநூல் நமக்கேன் கிடைக்கவில்லை? இந்திரன் வழிபாட்டையும் இந்திரனை இறைவனாகக் கொண்ட சமயத்தையும் கூண்டோடு ஒழித்தபோது, அவன் இயற்றியதாகக் கூறப்பட்ட ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலும்கூடச் சுவடும் தெரியாதவாறு அழித்தொழிக்கப்பட்டிருக்க வேண்டுமன்றோ?


கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கவிராச மார்கம் என்ற இலக்கண நூலாகும். அதற்குமுன் கன்னட மொழியில் இலக்கியமென யாதும் இருந்ததில்லை. கவிராச மார்கம் என்னும் அம் முதல்நூல் உள்ளபடியே பல்லவன் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் சங்கதப் புலவனாயிருந்த தண்டி என்பான் சங்கத மொழியில் ஆக்கிய காவ்ய தர்சா என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். அதாவது, கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலேயாகும்.


சங்கதம் என்னும் எசுப்பராந்தோ அல்லது செயற்கைமொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. அந்த மொழியிலான முதல்நூலும்கூட ஒரு மொழிபெயர்ப்பு நூலாக இருந்தது போலும். அந் நூல், தமிழிலான ஐந்திரம் என்னும் இலக்கணநூலின் மொழிபெயர்ப்பாகவே இருந்திருக்க வேண்டும். இதனால்தான், சங்கத மொழிக்கான முன்னோடி இலக்கண மரபு ஐந்திர இலக்கண மரபேயென ஏ. சி. பர்னெல் கூறுவார். தமிழ் ஐந்திரத்தைச் சங்கத மொழி யில் மொழிபெயர்த்துக்கொண்டபின், அதன் தமிழ் மூலத்தையே அழித்திருக்க வேண்டும். அடுத்து அந்தச் சங்கத மொழிபெயர்ப்பை யும்கூட அழித்துவிட்டனர் போலும்.


மறைந்த தமிழ் நான்மறையின் திருட்டு வடிவம்தான் சங்கத மொழியிலான இருக்கு முதலான நான்கு வேதங்கள் என்பது என் நிலைப்பாடு. அந்த இருக்குவேதத்தில் இந்திரன் தலைமையில் 33 தேவர்கள் வானில் உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்திரன் உள்ளிட்ட 31 தேவர்களின் பெயர்கள் மட்டுமே அதில் காட்டப்படுகின்றது. பாகத மொழியிலோ சங்கத மொழியிலோ குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இல்லாததால், இருக்குவேதத்தில் வரும் தேவர்களின் எண்ணிக்கை 33 ஆயினும், அதில் 31 தேவர் களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னிரு உயி ரெழுத்துகளைப் பன்னிரு கதிரவர்(ஆதித்தர்)களெனக் கூறுகின்ற இருக்குவேதம், அதே கதிரவனைக் குறிக்கின்ற மித்திரன், சவித்தா, சூரியன் என்பவற்றையும்கூட முப்பத்தொரு தேவர்களில் அடக்குவது கூறியது கூறல் என்ற பிழையாகும். தமிழிலான முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாவர் என்கின்ற உண்மையை அறியாமையாலோ அதை வேண்டுமென்றே மறைப்பதற்காகவோ பிராமணர்கள் இக் குழறுபடியைச் செய்து வைத்துள்ளனர்.


சுவடும் தெரியாது போனதேன்?


சமயம் என்னும் கருத்துருவைத் தழுவிய விளக்கங்களும் வழி பாடுகளும் சடங்குகளும் தோன்றுவதற்கு மீமிக முன்னால் குருட்டு நம்பிக்கைகளும் அந் நம்பிக்கைளைச் சார்ந்த சடங்குகளும் வழிபாடுகளுமே தொல்மாந்தரிடம் பரவலாயிருந்தன. இந் நம்பிக்கைகளின் வழிவந்த சமயக் கோட்பாடுகள் மக்களின் அரசியல்-பொருளியல்-குமுகியல் கட்டுமானங்களையும் வாழ்வியல் நெறிகளையும் முற்றாக ஆட்கொண்டு அவற்றை ஆட்டிப்படைக்கவும் செய்துவந்ததே நடப்புண்மை. நம்பிக்கை என்ற உளத்தியல் கூறு, வாழ்வியல் என்ற புறமெய்ம்மையைத் தன் பிடிப்புக்குள் இறுக்கி வைத்துக்கொண்டு அப் புறமெய்ம்மையின் மீதே ஆளுமை செய்கின்ற போங்கை வரலாற்றின் வழிநெடுகிலும் காண்கின்றோம்.

உருத்திரன் வழிபாடு சிவனியச் சமயமாவதற்கும், மாயோன் வழிபாடு மாலியச் சமயமாவதற்கும் மிக முன்னரே தோன்றி மிகப் பரவலாயிருந்த வழிபாடே இந்திரன் வழிபாடு. இந்த இந்திரன் வழிபாடு பன்னூறு ஆண்டுகளாக அரசர்களுக்குரிய அரசு வழிபாடாகவும் இருந்தது. இந்திரனுக்கு ஊர்தோறும் கோயில்கள் இருந்தன. கோயில்கள் இருந்ததால், பூசாரிகளும் இந்திர விழாக்களும் இருந்திருக்கத்தானே வேண்டும்?


இந்திரன் வழிபாட்டிற்கு இணையாகப் பின்னர் வளர்ந்ததே ஐயனார் வழிபாடு. ஆசீவகத்தின் முனைவர்களான மற்கலி, பூரணர், கணி நந்தாசான் ஆகியோரின் உருவகம்தான் ஐயனார் வழிபாடு. கி. பி. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி. பி. 7ஆம் நூற்றாண்டில் முகட்டினைத் தொட்ட சிவனிய, மாலிய இறைப்பற்றி (பத்தி) இயக் கத்தின் எழுச்சியால் ஒருகால் மிகப் பரவலாகவும் அரசர் போற்றிய வழிபாடாகவுமிருந்த இந்திர வழிபாடு, அதன் சுவடுகளும்கூடத் தெரியாவண்ணம் முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட்டது. இந்தி ரனுக்கு இணையாக வளர்ந்தோங்கிய ஐயனாரையாவது ஊருக்கு அப்பால் ஏரி குளங்களுக்கு அருகில் ‘புறம்பணையான்’ என்றாவது வைத்தனர். ஆனால், இந்திரனை மட்டும் சுவடு தெரியாது அழித்தொழித்ததோடு நில்லாது, அந்த இந்திரனைப் பழிக்கவும் தூற்றவும் செய்த கதைகளும் தொன்மங்களாகப் புனைந்துரைக்கப்பட்டன.


முளைக்காத வித்து


இந்திரனின்மேல் இவ்வளவு பெரிய கடுப்பு ஏன் வந்ததென் பதைத் தமிழ் அறிவர்கள் கண்டறிய முற்படவேயில்லை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆய்வுநெறிகளும் விளக்கங்களும் தமிழ்த் தெய்வமான இந்திரனுக்கு ஏன் இந்தக் கதி என்பதைத் தெரிந்து கொள்ள முனையவில்லை. அக்கால் ஆழ வேரோடி யிருந்த ஆரிய-திராவிடக் கருத்தியலே இதற்கான முதற்கரணம். ஆரிய-திராவிடக் கருத்தியல், இந்திரனை ஆரியக் கடவுளாகவே கருதியது. வந்தேறித் திராவிடர்கள் கற்பித்த ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு போட்ட கோட்டைக் கடக்கத் தமிழர்களில் ஆய்வா ளர்கள் எவரும் துணிந்தாரில்லை. இந்திரன் என்ற தமிழ்த் தெய்வத்தை அவர்கள் ஆரியருக்கே நீரட்டித் தந்துவிட்டனர். ஆரியக் கருத்தியலாருடன் சேர்ந்து ‘திராவிடர்’களும் இந்திரனை ஆரியனாகவே பார்ப்பதென்பது அவர்களின் வந்தேறி நலன்களுக்கு ஏற்புடையதாயிருந்தது. இதனால், வடுகம் எடுத்த இருவேறு தோற்றங்(அவதாரங்)களே ஆரியமும் திராவிடமும் என்றாயின.


முந்தைய சென்னை மாகாணத்திலிருந்த பழைய வடுக ஆள வந்தார்க்கு அந்த ஆரிய-திராவிடக் கருத்தியல் ‘திராவிடம்’ என்ற பற்றுக்கோட்டைக் காட்டியது; அவர்கள் அதைக் குரங்குப்பிடி யாய் பற்றிக்கொண்டனர்.


பண்டைய உரோமப் பேரரசை ஓயாமல் அலைக்கழித்துப் பின்பு அந்த உரோமையே கைப்பற்றித் தாங்களே உரோமானியமய மான செருமானிய அநாகரிகரைப்போல், அநாகரிகர்களாயிருந்த வடுகர்களும்கூடப் பண்டைத் தமிழரசுகளை அவ்வாறே அலைக் கழித்துப் பின்னர் அந்தத் தமிழரசுகளையே வீழ்த்தித் தமிழ்மயமாயினர் என்பதும் வரலாறு.


இவ்வாறு தமிழரசுகளை வீழ்த்திய வடுக அநாகரிகர்கள், வானியல் உருவகங்களின் வழிவந்த பண்டைத் தமிழரின் பெருந் தெய்வ வழிபாட்டு வடிவங்களாகிய இந்திரன், மாயோன் (மால்), சேயோன் (கார்த்திகேயன் வடிவில் முருகன்), உருத்திரன் (சிவன்) ஆகிய தெய்வங்களைத் தமதாக்கிக்கொண்டனர். கீழைக்கங்கைக் கரையிலிருந்த நன்னர்(நந்தர்)களின் அரசை வீழ்த்தியதோடு நில் லாத இவ் வடுகர்கள், தென்னிந்தியாவில் முடங்கிய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளையும் வீழ்த்தி ஆளவந்தார்களாகிக் குந்திக் குதிர்ந்து வந்தேறி ஆட்சியியல் கட்டுமானத்தைக் கண்டபின் - குறிப்பாகப் பல்லவ வடுகரின் காலத்தில்- வடக்கிலிருந்து வந்த அருகத்தையும் புத்தத்தையும் சேர்த்து இந்திரன் வழிபாட்டையும் ஒழிக்கத் துணைபோயினர்.


திருநாவுக்கரசர் “ஆனைஇனத்தின் துகைப்புண்ட அமணரா யிரமும் மாய்த்தற்பின்” - அதாவது, யானையைச் சமயக்குறியீடாகக் கொண்ட ஆயிரம் ஆசிவகரைப் பழையாறையில் கொன்று கொலைவெறியாட்டை நடத்திய பின்னரும் - திருஞானசம்பந்தரின் தூண்டுதலால் பாண்டியநாட்டில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவி லேற்றிய பின்னரும் - அக்கால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மீப்பெரும் சமய வன்முறை வெறியாட்டிலிருந்து தப்பிப் பிழைத்த அருகரின் ஊர்கள் சில தமிழகத்தில் இருக்கத்தான் செய்தன; அருகர் கோயில் களும் எஞ்சிக் கிடக்கத்தான் செய்தன. ஆனால், இந்திரனுக்கான கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்களாகவும் பெருமாள் கோயில்களாகவும் செய்யப்பட்டன. இந்திரனுகென்று ஒரு கோயிலையும் விட்டுவைத்தாரில்லை. ஆசீவகம் என்னும் அறிவுச் சமயம் இருந்த இடம்கூடத் தெரியாதவாறு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.


இவ்வாறு நேர்ந்ததற்கான கரணங்களைத் தேட வேண்டும்.


வடுக வந்தேறியத்தின்கீழ் இந்திரன் வழிபாடு ஒழிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுவதால், அந்த இந்திரன் வழிபாட்டை உயிர்ப்பிக்கவோ புதுப்பிக்கவோ வேண்டுமெனக் கூறுவதாகாது.


தமிழரினத்தின் வீழ்ச்சிக்குக் கரணமாயிருந்த வடுகப் படையெடுப்புகளுக்குப்பின் புதிதாக முளைத்த அல்லது புகுத்தப்பெற்ற சமய நம்பிக்கைகளும்கூடத் தமிழர்களின் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் வழிகோலியதை இக்ககாலத்துத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் எண்ணத்தில்தான் இந்திரன் வழிபாட்டைப்பற்றிக் கருத்துரைக்க முனைந்தோம்.


இந்திரனை வரன்முறையற்ற பெண்வெறியனாகவும் காமு கனாகவும் தொன்மங்கள் காட்டுகின்றன. இந்திரன் வழிபாடு அருவருக்கத்தக்க காமக்களியாட்டங்களுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவற்றின் ஊடாக நன்கு குறிப்பறிய முடிகின்றது. இக் காமக்களியாட்டங்கள் வரம்பு மீறிச் சென்றதால், கடுந்துறவுவழி நின்ற ஆசிவகமும் அருகமும் புத்தமும் அந்த இந்திர வழிபாட்டை எதிர்த்துக் களம் கண்டிருக்க வேண்டும். இச் சூழலை வடுகப் பிராமணியம் பயன்படுத்திக் கொண்டது. இது இந்திர வழிபாட்டுக்கு எதிரானதொரு சூழலைத் தோற்றுவித்திருக்கும்.


மேலும், அக்குத்தின்றி நெடுஞ்ஞாண் கிடையாகத் தரையில் வீழ்ந்து இறைவனிடம் அடிபணிகின்ற (சரணாகதி) நெறியான இறைப்பற்றி (பத்தி) நெறி, அடிமைகளாய் வழியறியாது திகைத்து நின்ற தமிழர்களிடம் மீப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியதும்கூட இந்திர வழிபாடு ஒழிக்கப்படுவதற்கான கரணங்களில் ஒன்றாயிருந்திருக்கும்
 
நன்றி  :  அறிவர்  குணா 
 
மேலும் தகவலுக்கு  வள்ளுவத்தின்  வீழ்ச்சி  நூலை  படியுங்கள் 

சகரம் காப்போம்

சகரம்  காப்போம் :
 
காவிரிக்குத் தெற்கேயுள்ளவர்கள் பொதுவாக சகரத்தை "ச" (cha) என்று சரியாகவே ஒலிப்பர்.

காவிரிக்கு வடக்கே அச் சகரம் ஸகரம்மகிச் சோறு (choru) என்பது ஸோறு என்றும், செல்வம்(Chelvam) என்பது ஸெல்வம்(selvam) ஏன்றும் திரிந்து ஒலிக்கும். சகரம் அவ்வாறு ஸகரமாவது தமிழ் எதிர்ப்பை தானறிந்த தன்வினையாகக்கொண்ட பார்பபானருக்கு எடுத்த கையாகியது.. அந்த ஸகரத்தை அவர்கள் வேண்டுமென்றே ஷகரமாக (sha)ஒலிக்கத் தலைப்பட்டுள்ளனர்.

நேற்று வரை அவாள் இவாள் எனப் பேசுவதன் வாயிலாகப் தாங்கள் இன்னாரெனக் காட்டிக்கொண்டனர். அந்த அவாள்,இவாள் சாதிநடை இன்று நகைப்பிற்குரியதாகப் போய்விட்டமையால்,இன்று சகரத்தை ஷகரமாக ஒலிப்பதன் வாயிலாக அவர்கள் தங்களின் சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்கின்றனர்.

க-------ங
ச-------ஞ
ட-------ண
த--------ந
ப--------ம

ஆகிய தமிழ் உயிர்ர்மெய்யெழுத்துக்களீல்,க,ச,ட,த,ப முதலான வல்லின் உயிர்மெய் எழுத்துக்களை விரிவாக்கியதாலேயே வட மொழிகளில் ka,kha,ga,gha போன்ற வருக்க ஒலியன்கள் தோன்றின. அவற்றில் "ச" வரிசையில் சகரமே (cha)முதல் எழுத்தாகும்.இதுவே தமிழில் ஸகரம் முதல் எழுத்தாக வரமுடியாது என்பதைக் காட்டும்.தமிழில்,அச்சகரமே ஒரு சொல்லுக்கு இடையில் ஸகரமாக ஒலிக்குமேயின்றி,ஸகரம் முதல் எழுத்தாக வரவே வராது. சகரம் (cha) மட்டுமே முதல் எழுத்தாக வரும்.அதனாலேயே ஸகரம் முதலான வடவொலி எழுத்துக்கள் வடிக்கப்பட்டன.

சரியாக ஒலிப்பதன் வாயிலாகச் சகரத்தை மீட்பது தமிழைக் கண்ணெனப் பேணும் தமிழ்காப்பு வினையேயின்றி வேறில்லை.
நன்றி :  அறிஞர் குணா அவர்கள்