திரைத்தென்றல்

பாலை :

 
 
 
 
தமிழன்  பார்க்க வேண்டிய படம் 
 
 
பாலை  சங்க காலத்   தமிழர் வாழ்வை பற்றி கூறும் ஒரு திரைப்படம். இது செந்தமிழன் இயக்கி 2010ல் வெளிவந்தது. இதில் நடித்த சம்மு என்னும் நாயகியை தவிர்த்து மற்ற அனைவரும் இந்த திரைப்படத்திலேயே அறிமுகமாகினர்.
கதை :
கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர்  என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர்  ஆய்க்குடி  என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர்.
அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும் கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர்.
இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர்.
 
தற்போது முல்லைக்கொடி தமிழர்களிடம் ஆயுதங்களும் கிடையாது. படை பலமும் கிடையாது. ஆனால் ஆயக்குடியை களவாடிய வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டத்திடம் ஆயுதங்கள் பலவும் படைபலமும் உண்டு. அதனால் முல்லைக்கொடி தலைவன் ஆயக்குடி நோக்கி போர் சரியான முறையில் போர் தொடுக்க வேண்டும் என்று முல்லைக்கொடி மக்களிடம் கூறுகிறார். அதற்கு பாலை முதுவன் இணங்க மறுத்து சரியான முறைப்போர் சரியானவர்களிடம் தான் தொடுக்க வேண்டும். இணக்கம் பேசுவதாக கூறி முதுகில் குத்திய வந்தேறி கூட்டத்திடம் சூதுடன் தான் போர் தொடுக்க வேண்டும் என்று தலைவனையும் மக்களையும் எச்சரித்து அதற்கான திட்டத்தையும் பயிற்சியையும் அளிக்கிறார்.
அத்திட்டத்தின் படி முல்லைக்கொடி மக்கள் தங்கள் மக்களில் யாரையும் இழக்காமல் வளனையும் மீட்கின்றனர். ஆயக்குடி வந்தேறிகளின் ஆநிரைகளை கவர்கின்றனர். இறுதியான போரில் ஆயக்குடி வந்தேறிகள் அனைவரும் அழிய முல்லைக்கொடி தமிழர்களின் தலைவனும் வந்தேறிகளின் தலைவனும் மட்டும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் தப்பித்த சில முல்லைக்கொடி மக்கள் ஆயக்குடியில் மீண்டும் வாழ்கின்ற்னர்.
 

 

வாகை சூட வா :



 
 
 



 இயக்குனர் சற்குணத்தின் இரண்டாவது படம் வாகை சூடவா. இப் படத்தில் குழந்தை தொழிலாளர் சிக்கலை  கையில் எடுத்திருக்கிறார். அதற்குள் எழிலுடன்  காதலையும் சொல்கிறார் இயக்குநர். 1960ல் நடக்கும் சம்பவம்தான் கதை. தனக்குத்தான் அரசு வேலை கிடைக்கவில்லை ஆனால் தனது மகனுக்காகவது அரசு வேலை எப்படியாவது வாங்கித் தந்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்  இருப்பவர் அண்ணாமலை (பாக்யராஜ்). அவர் மகன் வேலுதம்பி (விமல்)  ஆசிரியர்  பயிற்சி  முடித்திருக்கிறார்.
ஊரக ஊழிய அமைப்பு (கிராம சேவா சங்கம் )என்னும் அமைப்பின் மூலமாக கிராமத்தில் ஆறுமாதம் தங்கி படிப்பு சொல்லி தந்தால் அரசு வேலை கிடைக்கும் என்று சொல்லுகிறார் அப்பா. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த கிராமத்திற்கு பயணப்படுகிறான் வேலு. அந்த கிராமத்தில் குழந்தைகளும் பெத்தவங்களும் செங்கல் சூளைகளில் இராத்திரி பகல்னு கூட பார்க்காமல் வேலை செய்கிறார்கள். யாருக்குமே படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லை. படிப்பு சொல்லி தர வந்திருக்கும் வாத்தியாரான விமலை பார்த்ததும் குழந்தைகள் ஓடி ஒளிகிறார்கள். பெத்தவங்களும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுக்கிறார்கள். அப்புறம், சில சம்பவங்களுக்குப் பிறகு குழந்தைகள் விமல்கிட்ட படிக்கிறதுக்கு வர ஆரம்பிக்கிறாங்க. அப்படி இருக்கும் போது, விமலுக்கு அரசு வேலையில் சேரச் சொல்லி கடிதம் வர தொடர்ந்து அந்த பசங்களுக்கு பாடம் சொல்லித்தந்தாரா? இல்ல அரசு வேலைக்குப் போனாரா என்பது முடிவு .
முதலில் பாராட்டப்பட வேண்டியது  கலை இயக்குநரைத்   தான். . அந்த காலத்தில பயன்படுத்தப்பட்ட  வானொலி , காப்பி கொட்டை அரைக்கும் மெஷின், கடிகாரங்கள் எல்லாவற்றையும் தேடிப் பிடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தலைப்பு  போடும் போது வரும் செங்க சூளைகாரா பாடல் அனிதாவின் குரலில் நம்மை கட்டிப் போட வைக்கிறது. தலைப்பு முடியுறப்போ, செங்கலை ஒயிலாக போட்டு தலையில் உட்கார வைக்கிற அந்த ஆளுக்கு  அரங்கில்  கை தட்டல்  விழுகிறது . படத்தில் பைத்தியமாக அலையும் ஒருவர்தான் அந்த ஊருக்கு முதலில் வந்தார் என்றும், அவர் கண்டுபிடித்த அந்த மண்ணிலே செங்கல் தயாரிக்க ஆரம்பித்து, கடைசியில் இயற்கை தம்மால் அழிந்து விட்டதாகவே எண்ணி புத்தி பேதலித்துப் போன அந்த மனிதரை திரையில் காட்டும் போதெல்லாம் இயற்கை நம்மை எச்சரிப்பதாகவே தோன்றுகிறது. செங்கல்சூளையில் குழந்தைகள் வேலைபார்ப்பதையும் அவங்க எல்லாம படிக்காமலே இருப்பதையும் மென்மையாகவே சொல்கின்றன காட்சிகள்.
வேலுதம்பி கேரக்டரில் நடித்திருக்கிறார் விமல். அப்பாவி வாத்தியார் இளைஞன் கேரக்டரில் பின்னி பெடலெடுக்கிறார் விமல். அந்த கதாபாத்திரம் அவருக்கு ரொம்பவே பொருந்தியிருக்கிறது பண்ணையாரின் ஆட்கள் இவரை ஊரைவிட்டு போ என்று சொல்லி போட்டு புரட்டி எடுப்பதும் அதற்கு இவர் மறுக்கும் போதும் உச் கொட்ட வைக்கிறார்.
விமல் அப்பா  பாத்திரத்தில்  நடித்திருக்கிறார் பாக்யராஜ். படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் வரும் இவர், அப்புறம் கடைசியில்  உச்ச கட்டத்தில்  சமையத்தில் கதையில் எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறார். .
அந்த சேட்டைக்கார சிறுவர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். திரையில் அவர்கள் வரும் போதெல்லாம் ஏதாவது சின்னப் பிள்ளைத்தனமான விஷயங்களை வேடிக்கையாக செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் மாட்டிக் கொண்டு விமல் தவிப்பதும் சமாளிப்பதும் செம அலப்பறையைக் கொடுக்கின்றன.
சமூக சிக்கலை எழிலுடன்  சொன்னவிதத்தில் இயக்குநர் சற்குணம் உயர்ந்து நிற்கிறார். பின்னணி இசையில் மட்டுமல்லாது பாடல்களின் இசையிலும் மெய் மறக்கச் செய்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். செங்கசூளக்காரா, சரசர சாரக்காத்து, போறானே போறானே பாடல்கள் ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கண்களுக்கும் காதுகளுக்கும் தருகின்றன


No comments:

Post a Comment