மாமல்லபுரம்
தமிழ்நாட்டை பொருத்தவரை சிற்பக் கலைகளின் திருப்புமுனையாக அமைந்துள்ள மாமல்லபுரம் அக்காலத்து சமூக நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.
சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரமானது மகேந்திரபல்லவராலும், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட பரிசில்
சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரமானது மகேந்திரபல்லவராலும், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட பரிசில்
குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் போன்றவையெல்லாம் பண்டையக் காலத்து கட்டுமானக் கோயில்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. கட்டிடங்களாக மட்டுமின்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அழகிய கற்கோயில் காண்போரின் கண்களை வெகுவாக கவர்கிறது. குன்றுகளை குடைத்தெடுத்த கோயில்களை போன்றதல்ல இக்கோயில், குன்றுகளிலிருந்து கற்களை பெயர்த்து கொண்டுவந்து கட்டப்பட்ட கோயிலாக காட்சியளிக்கிறது.
மேலும், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன.


No comments:
Post a Comment