வெங்காலூர் மற்றும் தமிழ்

வெங்காலூர்  மற்றும்  தமிழ்

மண்ணின் மைந்தராம்  திகிளர்கள் நிறைந்த  வெங்காலூர்  இன்று சூழ்நிலையால்  கன்னடர் பால் உள்ளது. தமிழர்  தங்கள் வீட்டு   நிகழ்ச்சிக்கு 
தமிழில் ஒரு அறிவிப்பு  பலகை வைக்கக் கூட வழி இல்லாமல் கன்னடத்திலோ  அல்லது ஆங்கிலத்திலோ  வைக்க வேண்டிய  சூழ்நிலை .
உண்மையில்  தமிழர்கள்  வெங்காலுருக்கு   வந்தேறிகளா ? .

1911 ல் ஆங்கிலேயர்  எடுத்த  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு  சொல்கிறது

தமிழர்     -       47 விழுக்காடு
தெலுங்கர் - 37 விழுக்காடு
கன்னடர்  - 13 விழுக்காடு
மற்றையவர்  - 3 விழுக்காடு

இந்த கணக்கு முறையில் எந்த வேறுபாடும்  இல்லை 1956 வரை  அதாவது கருநாடகம்  தனி மாநிலமாக  மாறும் வரை .

தமிழன் திராவிடத்தால்  மயங்கி  நின்ற நிலையில்  வெங்காலூர்  கன்னடரால்  மடி பறித்து  செல்லப் பட்டது .

தமிழன்   வைத்த பெயர்கள்  கன்னட மயமாகி  தமிழனுக்கே  தெரியாதவாறு  திரிக்கப் பட்டுள்ளது

கன்னடமயம் :

மடிவாளா  :  மட வளாகம்

அல்சூரு  :  பழசூர்

கோர மங்களா  :  சோழ மங்களம்

பின்ன மங்களா  -  விண்ண மங்களம்

 எலகங்கா  - இலைப்பாக்கநாடு 

இருவுளியூர் இப்பலூர்

 ஐகண்டபுரம் -ஐவர்கண்டபுரம்       

ஆகுதி    ஆவதி

டொம் ளூர்  - தும்பளூர்              

ஒகட்டா  - ஒவட்டம்   

பாளையங்கள்   எல்லாம்  பால்யா என்று பலுக்கப் படுகிறது.

காட்டு :
 காரைப்பாளையம்  - காரப் பால்யா


தமிழன்  திராவிடன் என்ற போலி அடையாளம்  தவிர்த்து ,  (இந்தி)யன்  என்ற போலி அடையாளமும்  தவிர்த்து தமிழன் என்ற முகவரியோடு   தலை நிமிர்ந்து , ஒன்றிணைந்து  குரல் கொடுத்தால்  அன்றி  இதற்கு  ஒரு முடிவில்லை .

இல்லையென்றால் , தஞ்சைத் தமிழன்  ஒட்டு மொத்த  தமிழ்நாட்டு  மக்களோடு  சேர்ந்து காவேரி  ஆற்று நீர் உரிமைக்கு  போராடினால்  ,  கன்னட  வெறியரால்  வெங்காலூரில்  வாழும்  அப்பாவித்  தமிழன் அடிபட வேண்டியிருக்கிறது .        

கன்னடன்  தன வரலாறை கி பி 700 ல்  இருந்து தொடங்காமல்   குறைந்தது  கி பி  1 ல்  தொடங்கினால்  தொப்புள் கோடி உறவு யார் ?. அவன்  அடையாளத்தை  சங்கத் மொழியால்  சீரழிக்கும்  அயலார்  என்ற அடிப்படை புரியும்.

ஆனால்  எப்படி   தயிர்  மீண்டும்  பாலாக  மாறாதோ  அப்படியே  கன்னடனும்  தமிழனாக  மாற  மாட்டான் .  தமிழர்கள்  ஒன்றிணைந்து  தங்களை  தற்காத்து   தாய்த்  தமிழ் உறவுகளோடு  இணைந்து  நின்று  திராவிடத்தையும்  , ஆரியத்தையும்  ஒருங்கே  எதிர்ப்பதே  இப்போதைய  தலையாய  பணி  


 

No comments:

Post a Comment