மாலே , மாயோனே ,திருவோண நான்மீனின் தலைவனே, ஒரு கொடூர இனவெறியன் வந்து உன்னை வணங்க வேண்டுமா?, நீ என்ன கையால் ஆகாதவனா ?, தமிழனின் வடவெல்லைக் காவலனே? . அவன் என்ன மன்னிப்பு கேட்டா வந்தான் உன் கோயிலுக்கு ? . ஒன்று மட்டும் உறுதி . தமிழனைக் கொல்லுவதிலும் , துணை போவதிலும் எல்ல இந்தியனும் , திராவிடனும் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள் .வேங்கடமுடையானே , கொலைகாரன் இராசபக்சே உன் கோயில் வந்த போது என் செய்தாய் ?.திருவுண்ணாழியில்( கர்ப்ப கிருகம் ) வீற்றிருக்கும் மலையப்பனே , ஏழு மலையானே
தரம் கெட்டவனிடம் காணிக்கை பெற்று நீ தரம் இழந்து விட்டாய் . நீ ஒரு வெறும் கல் என்பதை உன்னோடு சாமியாடும் உச்சிக் குடுமிக் கூட்டம் உறுதி செய்து விட்டது. பணத்திற்காக பேயோடு உறவாடும் உன்னை தமிழர்கள் புறக்கணிப்பார்களாக.



No comments:
Post a Comment